முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைப்பாகையை அகற்றக் கோரி அமெரிக்க பெண் எம்.பி.க்கு மிரட்டல்

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்   - அமெரிக்காவின் மின்னசோட்டா பெண் எம்.பி. அணிந்திருந்த தலைப்பாகையை அகற்றக் கோரி கார் ஓட்டுநர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.  குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் அமெரிக்கா வின் புதிய அதிபராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். வரும் ஜனவரி 20-ம் தேதி அவர் அதிகாரப்பூர்வ மாக பதவியேற்க உள்ளார்.

முஸ்லிம் களுக்கு எதிரான வன்முறை :
தனது பிரச்சாரத்தின்போதே அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய தடை விதிப்பேன் என்று ட்ரம்ப் கூறினார். அவர் விரைவில் அதிபராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அந்த நாட்டில் முஸ்லிம் களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் மின்ன சோட்டாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண் எம்.பி. இஹான் ஒமர் (34). சோமாலியாவை பூர்வீகமாகக் கொண்ட அவர் பாரம்பரிய வழக் கப்படி தலைமுடியை மறைக்கும் வகையில் தலைப்பாகை அணிவது வழக்கம்.

சில நாட்களுக்கு முன்பு அவர் வாஷிங்டனில் ஒரு காரில் பயணம் செய்தார். அப்போது அந்த காரின் டிரைவர், இஹான் ஒமர் அணிந் திருந்த தலைப்பாகையை அகற்று மாறு மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மறுக்கவே அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அச்சுறுத்தல் :
இந்த சம்பவம் குறித்து இஹான் ஒமர் சமூக வலைதளத்தில் தனது கவலையைப் பதிவு செய் துள்ளார். முஸ்லிம்கள் மட்டுமன்றி ஆசியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் இதேபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக புகார்கள் எழுந் துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்