முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்று சிறு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த சுஷ்மா சுவராஜூ குணமடைய வாழ்த்துக்கள் - மம்தா பானா்ஜி

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  சிறு நீரக கோளாறால் அவதிப்பட்டவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்குமாற்று சிறுநீரகம்  6 மணி நேர அறுவை சிகிச்சையில் நேற்று பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் சுஷ்மா உடல் நிலை சீராக உள்ளது. சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சரும் மூத்த பா.ஜ.க தலைவருமான சுஷ்மா சுவராஜ் சிறு நீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டார். இதனால் அவர் நாட்டின் முதன்மை மருத்துவ இன்ஸ்ட்டியூட்டான எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 64 வயது சுஷ்மாவுக்கு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலை சீராக உள்ளது. அவருக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகம்  உறவினர் அல்லாத நபரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. சுஷ்மாவிற்கு 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அவருக்கு கார்டியோ தொராசிக் சென்டரில்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் உள்பட 50 பேர் கொண்ட மருத்துவக்குழு சுஷ்மாவுக்கு அறுவை சிகிச்சையின் போது இருந்தது. அப்போது செவிலியர்கள், தொழில் நுட்ப நிபுணர்கள் மற்றும் இதர உதவி நிபுணர்கள் உடன் இருந்தனர்.

 அறுவை சிகிச்சையின் போது, நாட்டின் பிரபல அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்  வி.கே. பன்சால், வீ.சீனு, சிறு நீரக மருத்துவ நிபுணர்  சந்தீப் மகாஜன்  கார்டியோ தொராசிக் மற்றும் ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை தலைவர் டாக்டர் பல்ராம் ஐரன் மற்றும் இதர மருத்துவ நிபுணர்கள் இருந்தார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள சுஷ்மா சுவராஜ் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்