முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷியா உதவியதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை முட்டாள் தனமானது : டொனால்டு டிரம்ப்

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - எனது வெற்றிக்கு ரஷியா உதவியதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பது முட்டாள் தனமானது என டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை அறிக்கை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவரது இந்த வெற்றிக்கு ரஷியா உதவியதாக அமெரிக்காவின் ‘சி.ஐ.ஏ.’ உளவுத்துறை ரகசிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அது குறித்து விசாரணை நடத்த தற்போதைய அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

டிரம்ப் கண்டனம்
இது குறித்து புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்பிடம் ஒரு செய்தி நிறுவனத்தின் நிருபர் பேட்டி கண்டார். அப்போது அவர் கூறியதாவது:- எனது வெற்றிக்கு ரஷியா உதவியதாக உளவுத்துறை அளித்துள்ள அறிக்கை முட்டாள் தனமானது என கருதுகிறேன். இது தோல்விக்கான மற்றொரு சாக்கு போக்கு என நினைக்கிறேன். எனவே ரஷியா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு நம்ப தகுந்தது அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்