முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வை உடைக்க பா.ஜனதா முயற்சி: மதுசூதனன் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, அ.தி.மு.க.வை உடைக்க எதிர்கட்சிகளும், மத்திய அரசாங்கத்தில் உள்ள பலரும் முயற்சி செய்கிறார்கள் என்று மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார்.

வடசென்னை வடக்கு மாவட்ட ஜெ. பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் ஆர்.கே.நகரில் நடந்தது.
அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலும் அவைத் தலைவர் மதுசூதனன் முன்னிலையிலும் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கழகத்தின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்ய வேண்டி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் பேசியதாவது:-

அ.தி.மு.க.வை உடைக்க எதிர்கட்சிகளும் மத்திய அரசாங்கத்தில் உள்ள பலரும் சதி வலை பின்ன பார்க்கின்றனர். கழகத்தை காப்பாற்றவும் கட்சியை வழிநடத்தவும் சரியான இந்த தருணத்தில் நாம் உறுதுணையாக ஒற்றுமையாகவும் செயல்பட வேண்டும்.

33 ஆண்டுகளுக்கு மேலாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் பாசமும், நட்பும் கொண்ட சசிகலா ஒருவரால் தான் கட்சியை வழிநடத்த முடியும். ஆகவே கட்சியை உத்வேகத்துடன் நடத்திட சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்