முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திர மோடியுடன் ராகுல் காந்தி சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2016      அரசியல்
Image Unavailable

 புதுடெல்லி  - காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான அக்கட்சியின் பிரதிநிதிகள்  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். அப்போது, அனைத்து விதமான விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.  முன்னதாக, 'பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் ஊழலில் ஈடுபட்டது குறித்த விரிவான தகவல்கள் என்னிடம் உள்ளன' என்று அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை   ராகுல் காந்தி  கூறியிருந்தார் .

வேளாண் கடன்கள்  தள்ளுபடிஆகுமா ?:
பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தோம். அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தோம். பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே விவசாயப் பிரச்சினைகள் வலுத்துள்ளது" என்றார். 

இந்தக் கோரிக்கைக்கு பிரதமர் அளித்த பதில் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தீவிரமாகப் பார்க்கப்படும் விவசாயிகள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர்  கூறினார். ஆனால், கடன் தள்ளுபடி குறித்த கோரிக்கையை வெறுமனே கேட்க மட்டுமே செய்தார்" என்றார் ராகுல் காந்தி. அப்போது, தன்னை அவ்வப்போது சந்திப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுமாறு ராகுலிடம் மோடி கூறியதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதன் பின்னணியில்தான் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது. இரு மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ள காங்கிரஸ், வேளாண் கடன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காகவே இந்தச் சந்திப்புக்கு முன்வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்