முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளழகர்-தல்லாகுளம் பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ஜன. 8ம் தேதி நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, மதுரை  அருள் மிகு கள்ளழகர் கோவில் மற்றும் அதன் உப கோவிலான தல்லா குளம் பெருமாள் கோவிலின்  திருஅத்யனம் உற்சவ விவரம் (பகல் பத்து- இராபத்து) அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கோவில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற ஜனவரி மாதம் 8ம் தேதியன்று கோலாகலமாக நடக்கிறது.

மதுரை அருள் மிகு கள்ளழகர் கோவில்  துணை ஆணையர்/ செயல் அலுவலர் (கூ-பொ)க.செல்லத்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அருள் மிகு கள்ளழகர் திருக்கோவில் மற்றும் அதன்  உப கோவிலான மதுரை தல்லா குளம் அருள் மிகு பிரசன்ன வெங்கடா சல பதி திருக்கோவிலில் 1426ம் பசலி திரு அத்யனம் உற்சவம் (பகல்  பத்து& இரவு பத்து) வருகிற 29-12-2016 முதல் 17-1-2017 முடிய நடைபெறவுள்ளது. 8-1-2017ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை 6 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் அருள்மிகு பெருமாள் பரமபத வாசலுக்கு (சொர்க்க வாசல்) எழுந்தருளவுள்ளார். மார்கழி மாதப்பிறப்பினையொட்டி தமிழ் மாதம் மார்கழி 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை(16-12-2016முதல் 13-1-2017வரை) அழகர்  கோவில்  அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் நடை திறப்பு  அதிகாலை  4 மணி முதல் நண்பகல் 12 மணிவரையிலும் மாலை  3.30 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் இருக்கும்.

அதேப்போன்று தல்லா குளம் அருள் மிகு பிரசன்ன வெங்கடாசல பதி திருக்கோவில்  மற்றும் வண்டியூர் அருள்மிகு வீரராகவப்பெருமாள் திருக்கோயில்  நடை திறப்பு அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 11.30 மணிவரையிலும் மாலை 5 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் இருக்கும்.

இவ்வாறு மதுரை அருள்மிகு கள்ளழகர் கோவில்  துணை ஆணையர்/ செயல் அலுவலர் (கூ.பொ) க.செல்லத்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்