திருச்சி மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2016      திருச்சி
விழிப்புணர்வு

திருச்சி :திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தலைமையில் நடைபெற்றது.

 

மேலும், மாவட்ட நலப்பணி நிதிக்குழுவிலிருந்து ஆதரவற்ற மற்றும் எச்.ஐ.வி.யுடன் வாழும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.2,000ம் வீதம் மொத்தம் ரூ.6 இலட்சத்து 82 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

 

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் திங்களில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மைய கருத்து "புதிய எச்.ஐ.வி., தொற்றுகள் இல்லாத உலகம்", "புறக்கணித்தல் இல்லாத உலகம், எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் இல்லாத உலகம்" என்பதாகும். அதன்படி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், சுகாதாரத்துறை, அரசு சாரா நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், அரசின் பல்வேறு துறைகள் இணைந்து எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்று குறித்து போதிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

மேலும் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகையாக முதலமைச்சரின் சிறப்பு நிதியிலிருந்து ஆண்டுதோறும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.2000ம், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.3000-ம், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.5000 வீதம் இந்த அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

 

எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1000- மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தின்கீழ் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ரூ.1000- உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கும், முதியவர்களுக்கும் ஒய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

 

திருச்சியில் எச்.ஐ.வி நோயை கண்டறிய 33 நம்பிக்கை மையங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 2 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 4 சுகவாழ்வு மையங்கள் மற்றும் 1 இலவச சட்டஉதவி மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. ஏ.ஆர்.டி கூட்டு சிகிச்சை மையம் அண்ணல் மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனைகளிலும் 11 இணை கூட்டு சிகிச்சை மையங்களும் நமது மாவட்டத்தில் செயல்படுகிறது என்றார்.

 

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் லில்லிமேரி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குநர் எஸ்.சௌந்திரராஜன், சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் (குடும்பநலம்) டாக்டர். எலிசபெத் மேரி, டாக்டர்.சாவித்திரி(காசநோய்), டாக்டர்.மணிவண்ணன், டாக்டர்.பிரியா, மாவட்ட எய்ட்ஸ் மற்றும் கட்டுபாட்டு அலகு மாவட்ட திட்டமேலாளர் இரா.செந்தில்குமார், மாவட்ட மேற்பார்வையாளர் இரா.செல்வகுமார் மற்றும் தன்னார்வளர்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.

 

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: