முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களை சீண்டினால் மோசமான விளைவுகள் ஏற்படும்: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சீனா எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்  - எங்களை சீண்டிப் பார்த்தால் மோச மான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதுதொடர்பாக சீன அரசின் அதிகாரபூர்வ ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ தலையங்க பக்கத்தில் நேற்று வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது: சீன கடல் பகுதியில் மிதந்த அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி அண்மையில் கைப்பற் றப்பட்டது. அந்த நீர்மூழ்கியை அமெரிக்காவிடம் திருப்பி ஒப்படைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போதைய அமெரிக்க அரசும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்து வருகிறது.

ஆனால் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அமெரிக்க நீர்மூழ்கியை சீனா திருடி விட்டதாகவும் அதைச் சீனாவே வைத்துக் கொள்ளட்டும் என்றும் அவர் தரக்குறைவாக விமர்சிக்கிறார்.

தகுதிகள் ட்ரம்பிடம் இல்லை:
அதிபருக்கு உரிய தகுதிகள் ட்ரம்பிடம் இல்லை. வல்லரசு நாடான அமெரிக்காவை வழிநடத் தும் திறன் அவரிடம் இல்லை. அமெரிக்க கடற்படைகூட ‘திருட்டு’ என்ற வார்த்தையை பயன்படுத்த வில்லை. ஆனால் ட்ரம்ப் திருட்டு பழி சுமத்துகிறார். அவரது செயல் பாடுகள் குழந்தைத்தனமாக உள் ளது. ஒன்றுபட்ட சீனா என்ற கொள்கைக்கு எதிராகவும் ட்ரம்ப் செயல்பட்டு வருகிறார். அவர் இதுவரை அதிகாரபூர்வமாக அதிபராக பதவியேற்கவில்லை.

அதனால் சீனா பொறுமை காத்து வருகிறது. அதிபராக பதவியேற்ற பிறகும் இதேபோன்று ட்ரம்ப் நடந்து கொண்டால் சீனா பொறுமை காக்காது. சீனாவைச் சீண்டி பார்த்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்