முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் ரூ.43 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2016      புதுக்கோட்டை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், நேற்று(20.12.2016) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது: தமிழகஅரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், வேட்டனூர் ஊராட்சி, வேட்டனூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.22.399 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் நடவு செய்தல் பணியையும், முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பசுமைவீடு கட்டுமான பணியையும், பலவரசன் ஊராட்சி, பலவரசனில் ஒன்றியப் பொது நிதியின் கீழ் ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள ஆழ்துளை கிணறு பணியையும் என மொத்தம் ரூ.4349900 மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது மரக்கன்றுகளை சாலையோரங்கள், குளங்கள் மற்றும் கண்மாய்களில் நட்டு வளர்த்து தினமும் நீர் ஊற்றி பராமரிக்கவும், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், மேலும் முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப்பொருட்களைக் கொண்டு விரைவாக கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், கூறினார். முன்னதாக மாவட்ட கலெக்டர் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், வேட்டனூர் மற்றும் எசைமங்களம் கிராமங்களில் விவசாயிகளால் நடவு செய்யப்பட்டு நீரின்றி வறண்டு கிடக்கும் நெல் வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்