முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு 18 புதிய ஏ.சி. பஸ்கள்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, ஆந்திரா போக்குவரத்து கழகமும், திருப்பதி தேவஸ்தானமும் இணைந்து கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு செல்ல 18 புதிய ஏ.சி. பஸ்களை இயக்க உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள்.சென்னையில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் செல்கிறார்கள். பெரும்பாலான பக்தர்கள் கோயம் பேட்டில் இருந்து பஸ்கள் மூலம் செல்கிறார்கள். ஆனால் ஆந்திரா போக்குவரத்து கழகமும், திருப்பதி தேவஸ்தானமும் இணைந்து கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தரிசனத்துக்கு பஸ் நிலையத்திலேயே பதிவு செய்யும் வசதி ஆரம்பித்தது.

இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு செல்ல 18 புதிய ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஏ.சி. பஸ்சுக்கு ரூ.282-மும், மல்டிடெக் ஏ.சி. பஸ்சுக்கு ரூ.319-மும், வால்வோ பஸ்சுக்கு ரூ.364 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்துடன் சாமி தரிசனம் செய்ய ரூ.300 செலுத்தினால் விரைவாக தரிசனம் செய்ய முடியும். வருகிற ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு, அதன்பிறகு வைகுண்ட ஏகாதசி, துவாதசி, சொர்க்க வாசல் போன்ற விழாக்கள் வருவதால் இந்த ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுவது பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago