முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பேர் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

ஜகார்த்தா  - இந்தோனேசியாவில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் தாக்குதல்
சிரியா மற்றும் ஈராக்கில் தளம் அமைத்து உலகின் பல்வேறு நாடுகளில் தாக்குதல்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ். அமைப்பினர் இந்தோனேஷியா போன்ற ஆசிய நாடுகளிலும் கைவரிசை காட்டி வருகின்றனர். அந்தவகையில் இந்தோனேஷியாவின் மத்திய ஜகார்த்தாவில் இந்த அமைப்பினர் கடந்த ஜனவரி மாதம் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு இருந்தனர்.

தேடுதல் வேட்டை
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தோனேஷியாவில் பயங்கரவாதிகளுக்கு  எதிரான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. பாதுகாப்பு படையினர் நாடு முழுவதும் அடிக்கடி தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜகார்தாவில் உள்ள ஒரு வீட்டில் மூன்று சந்தேக நபர்கள் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது.

3 பேர் சுட்டுக்கொலை
இந்த தகவலின் பேரில், அந்த வீட்டை இந்தோனேசிய பயங்கரவாத எதிர்ப்பு போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது திடீரென உள்ளே இருந்த சந்தேக நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு  போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் மூன்று பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது வெடிக்காத பல குண்டுகள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த  போலீசார் விசாரித்து வருகின்றனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் அடையாளம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்