திருச்சி மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் நுண்ணீர்ப்பாசன கருத்தரங்கம் : கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      திருச்சி

திருச்சி : திருச்சி மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் நுண்ணீர்ப்பாசன கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தொடங்கிவைத்து தொழில் நுட்ப கையேட்டினையும் வெளியிட்டார். கருத்தரங்கை தொடங்கி வைத்து தொழில் நுட்பகையேட்டினை வெளியிட்டு மாவட்ட கலெக்டர் பேசியதாவது.விவசாயிகள் நுண்ணீர் பாசத்தினால் குறைந்த அளவு நீரை அதிக பரப்பிற்கு பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கலாம். இதனால் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. செடிகள், காய்கறிப்பயிர்கள், பழமரங்களுக்கு வழங்கப்படுவதால் பயிரின் மகசூல் அதிகரிக்கப்படுகிறது. தேவையான இடங்களுக்கு மட்டும் நீர் பாயிச்சுவதால் களையின் ஆதிக்கம் குறைகிறது. மேலும் களை எடுக்கும் செலவும் குறைகிறது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் செடிகளுக்கு தேவையான உரத்தை நுண்ணீர் பாசன அமைப்பு மூலம் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் உரம் எந்தவித சேதாரம் இன்றி பயிர்களுக்கு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் மகசூல் கூடுவதுடன் செலவும் குறைகிறது.

 

சராசரியாக பத்து ஆண்டுகளில், ஐந்து ஆண்டுகள் நன்றாக மழை பொய்து வருகிறது. இரண்டு ஆண்டுகள் குறைவான மழையே பொய்கிறது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு வறட்சி நிலவிவருகிறது. வறட்சி நிலவும் காலகட்டத்தில் நிலத்தடி நீரை சேமிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். நிலத்தடி நீரை சேமிக்க நடைமுறையில் உள்ள பாசன முறைகளை மேற்கொள்வதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைகிறது. எனவே நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க, தேவையான அளவு தண்ணீர் எடுத்து நுண்ணீர்பாசனம் மூலம் பாய்ச்சபடுவதால், நிலத்தடி நீர்மட்டத்தை இயற்கையாக பாதுகாக்கப்டும். நுண்ணீர் பாசனம் அமைப்பதில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி அதிக அளவு பயன்பெற வேண்டும். உலக அளவில் சொட்டுநீர் பாசனம் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவை பொருத்தவரை 2000ம் ஆண்டு முதல் சொட்டுநீரின் பயன்பாடு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 20 இலட்சம் எக்டர் பரப்பளவில் நுண்ணீர்பாசனம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிகமாக மகாராஷ்டிராவில் சுமார் 2.50 இலட்சம் எக்டர் பரப்பிலும், ஆந்திரபிரதேசத்தில் 2.00 இலட்சம் எக்டர் பரப்பிலும் சொட்டுநீர்ப்பாசனம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 1.50 லட்சம் எக்டர் பரப்பில் சொட்டுநீர்ப்பாசனம், தெளிப்புநீர்ப்பாசனம், மழைத்தூவான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சேலம், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிக பரப்பில் நுண்ணீர்பாசனம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொட்டியம், உப்பிலியபுரம், தாத்தையங்கார்ப்பேட்டை, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, மருங்கப்புரி மற்றும வையம்பட்டி வட்டாரங்களில் அதிக அளவில் நுண்ணீர்ப்பாசனம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2015-2016ம் ஆண்டு 1137 எக்டர் பரப்பளவில் நீர் ஆதாரம் பெறப்பட்டு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதேபோல் இந்த 2016-2017ம் ஆண்டு 537 எக்டர் பரப்பளவிற்கு நிதி ஆதாரம் பெறப்பட்டு விவசாயிகள் தேர்வு செய்து சொட்டு நீர் பாசன அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் சொட்டுநீர் பாசன திட்டத்தில் அதிக அளவில் பங்குபெற்று பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார். இக்கருத்தரங்கில் நீர்பாசன மேலாண்மைத்துறை ஒய்வுபெற்ற பேராசிரியர் ஓ.எஸ்.சீனிவாசன், குமுளுர் வேளாண்க்கல்லூரி பேராசிரியர் லலிதா, நவலூர் குட்டப்பட்டு தோட்டக்கலைக் கல்லூரி பேராசிரியர் ஈஸ்வரன் மற்றும் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, துறையூர், தாத்தையங்காhப்;பேட்டை, தொட்டியம், மண்ணச்சநல்லூர் மற்றும் புள்ளம்பாடி வட்டாரங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: