சேலம் செவ்வாய்பேட்டையில் ஜவுளிக்கடையில் தீ விபத்து

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      சேலம்

சேலம் சேலம் மாநகரில் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ள பகுதிகளில் ஒன்றான செவ்வாய்பேட்டை  அமைந்து உள்ளது இம்தியாஸ் என்பவருக்கு சொந்தமான பிரபல துணிக்கடை. சுமார் 60 ஆண்டுகள் பழமையான இந்த துணிக்கடையில் பத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில்  நேற்று மாலை இந்த கடையின் பின் பகுதியில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும், கடையில் பணியாற்றும் ஊழியர்கள் கடையில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினர். மேலும் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு தீ  மள, மள வென்று கடை முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டது. கடுமையான கரும்புகையின் காரணமாகவும், இந்த கடை உள்ள பகுதி மிகவும் நெருக்கடியான பகுதி என்பதாலும், தீயணைப்பு துறையினர் தீ அணைக்க கடுமையான போராடினர். சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு வாகனம் மட்டுமல்லாமல், சூரமங்கலம், ஓமலூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சியின் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், கரும்புகை தொடர்ந்து நீடித்ததால், அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு கடுமையான மூச்சுதிணறல் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் முப்பது லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதி வேலை காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த வரத்தக பகுதியில் பட்டபகலில் ஏறபட்ட இந்த தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: