அரூர் வனப்பகுதியில் துப்பாக்கி மற்றும் நெத்தி பேட்டரியுடன் சுற்றித் திரிந்தவர் கைது

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      தர்மபுரி

அரூர் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் மற்றும் அரூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அதிகமாக வன விலங்குகள் வேட்டையாடுவதாக தருமபுரி மண்டல வனப்பாதுகாவலர் ஆஷிஷ்குமார் வத்சவா மற்றும் அரூர் மாவட்ட வன அலுவலர் சென்பகபிரியா ஆகியோருக்கு வந்த இரகசிய தகவலின் வந்துள்ளது. இதனை தொடர்ந்து மாவ மாவட்ட வன அலுவலரின் உத்திரவுப்படி   மொரப்பூர் வனச்சரகர் கிருஷ்ணன் தலைமையில் வனவர் வேடியப்பன், வனக்காவலர்கள் வேடியப்பன், செல்வராஜ், ராஜா, செல்வராஜ்  உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வனப்பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்பொழுது  மொரப்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட   கொளகம்பட்டி காப்பு காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில்  இருவர் மறைந்திருந்தனர். அப்பொழுது வனத்துறையினரை கண்டதும் இருவரும்  ஓட்டம் பிடித்தனர். உடனடியாக வனக்காவலர்கள்  அவர்களை துரத்தி மடக்கிப் பிடிக்க முற்பட்ட போது ஒருவர் தப்பி ஓட்டிவிட்டார்.  மேலும் பிடிபட்டவரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிடிபட்டவர்  பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் தேவராஜபாளையத்தை சேர்ந்த வேடி மகன் பழனி (50) எனவும், தப்பி ஓடியவர் சாமியாபுரம் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மகன் இராமன் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் இருவரும் வன விலங்குகளை வேட்டையாட கள்ளத்துப்பாக்கியுடன் வந்தது தெரிய வந்தது.  இதனையடுத்து பிடிப்பட்ட பழனியிடமிருந்து  அனுமதியின்றி பயன்படுத்தி வந்த  கள்ளத்துப்பாக்கி மற்றும் நெற்றி பேட்டரியை வனத்துறையினர்  பறிமுதல் செய்தனர். தொடர்ந்து  அரூர்  மாவட்ட வன அலுவலர் சென்பகபிரியா முன் ஆஜர்படுத்தி, அவரது உத்திரவின்படி கைது செய்தனர்.   மேலும் தப்பியோடிய  ராமனை பிடிக்க தனிக்குழு அமைத்து  வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: