மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடியக்கரை கடற்கரையில் நடைபெற்ற 16-ம் நாள்; நிகழ்ச்சியில் அமைச்சர் ஒ.எஸ். மணியன் தலைமையில் 100க்கு மேற்பட்ட அதிமுகவினர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      நாகப்பட்டினம்
மொட்டை

வேதாரண்யம் : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி வேதாரண்யம் அருகே கோடியக்கரை ஆதி சேது என்னும் சித்தர் கட்ட கடற்கரையில் 16-ம் நாள் நிகழ்;ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட அதிமுக செயலாரும், கைத்தறித்துறை அமைச்சருமான ஒ.எஸ். மணியன் தலைமையில் அதிமுகவினர் 100க்கு மேற்பட்டோர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு பொது மக்கள், அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் தொடர்ந்து 16-ம் நாள் அஞ்சலி நிகழ்ச்சியில 16 வகையான புண்ணியதானங்கள்; அந்தணர்களுக்கு வழங்கி ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து கடலில் புனித நீராடி அஞ்;சலி செலுத்தினர் தொடர்ந்து கோடியக்காடு குழகர் கோவிலில் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதையொட்டி மோட்சதீபம் ஏற்றப்பட்டது இதில் அமைச்சர் ஒ.எஸ். மணியன், மற்றும் அதிமுகவினர் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஜீவானந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், பாரதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆசைமணி, பூராசாமி, சக்தி ஒன்றிய கழக செயலாளர்கள் கிரிதரன், பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் எழிலரசு, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன், கருப்பம்புலம் பிரபு, ஒன்றிய துணை செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவானந்தம், முன்னாள் தொகுதி செயலாளர் சண்முகராசு, இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைஞாயிறு பேரூராட்சி செயலாளர் சௌரிராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் அம்பிகாதாஸ், ஒன்றிய அவைத் தலைவர் கலைச்செல்வன், தலைமைக்கழக பேச்சாளர் வேதசிவசண்முகம், வழக்கறிஞர்கள் தங்ககதிரவன், நமசிவாயம், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் வெற்றிச்செல்வி, முன்னாள் நகர செயலாளர் ஜெகன்நாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அதிமுகனர் பொதுமக்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: