திருவாரூர் மாவட்ட அதிமுக மகளிர் அணி, எம்ஜிஆர் மன்றம், விவசாய அணிசார்பில்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      திருவாரூர்
மகளிர் அணி, விவசாய அணி

மன்னார்குடி : திருவாரூர் மாவட்ட அதிமுக மகளிர் அணி, எம்ஜிஆர் மன்றம், விவசாய அணி தனித்தனியாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானமும், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியினை தொடர்ந்து வழிநடத்திட சசிகலா தலைமைப் பொறுப்பினை ஏற்க வேண்டும் என வலியுறுத்துவதுடன் கழக பொதுக்குழுவை விரைவில் கூட்டி சசிகலாவை கழகப் பொதுச்செயலாளார் என்ற தலைமை பொறுப்பினை ஏற்கச் செய்திட வேண்டும் எனவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தியறிந்து உயிரிழந்த அதிமுக தொண்டர்களின் மறைவிற்கு இரங்கலும், அவர்களது இழப்பால் வாடும் அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட மகளிர் அணி செயலாளர் பூபதி மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்ற்கு, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி, முன்னாள் நகராட்சி தலைவர் சுதா, மாவட்ட மகளிர் அணி அவைத்தலைவர் பூபதி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் உதயகுமாரி, நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் வரலெட்சுமி மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து வந்திருந்த மகளிர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதிமுக எம்ஜிஆர் மன்றத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமது அஸ்ரப் தலைமையில் நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற அவைதலைவர் அரிகிருஷ்ணன், துணைத்தலைவர் நடராஜன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட விவசாய பிரிவு சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட விவசாயிகள் பிரிவு செயலாளர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விசாயிகள் பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: