செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      சேலம்

சேலம்:சேலம், மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், மேச்சேரி பேருந்து நிலையத்தில்  நேற்று (21.12.2016) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க சிறு புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் திரளாக பார்வையிட்டனர். தமிழக அரசு தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், மேச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று (21.12.2016) நடத்தப்பட்டது.இப்புகைபடக்காண்காட்சியில், தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா அரிசி, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, விலையில்லா ஆடுகள் மற்றும் கறவைமாடுகள், விலையில்லா மடிக்கணினி, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டம், அம்மா குடிநீர், அம்மா குழந்தைகள் நல பெட்டகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு போன்ற எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.மேலும், சேலம் மாவட்டத்தில்  பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலைத்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும், கலெக்டர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இதனை சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்த்து பயன்பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: