கரூர் சேரன் மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      கரூர்
குடிமக்கள் நுகர்வோர்

கரூர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முதன்மை சார்பு நீதிபதி செயலாளர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பாக மணி விழா பேருரை ஆற்றினார். மேலும் கரூர் கூடுதல் சார்பு நீதிபதி சத்யதாரா பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் திராவக வீச்சு பற்றியும், மாணவிகள் தங்களை சட்டரீதியாக தற்காத்துக் கொள்ளும் முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அவரை தொடர்ந்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வும், நுகர்வோர் விழிப்புணர்வு பற்றியும் விரிவாக பேசினார். மேலும் வழக்கறிஞர் ராமநாதன் சட்ட விழிப்புணர்வு வழங்கினார். இறுதியில் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர், குடிமக்கள் நுகர்வோர் மன்றம் பாலசுப்பிரமணி நன்றியுரை கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: