முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      நாமக்கல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா  நடைப்பெற்றது. இதில் திரளான சிறுபான்மையின மக்கள் கலந்துக்கொண்டனர்.                 இவ்விழாவில் சிறுபான்மையின மக்களுக்கு சிறுபான்மை நலத்துறை மூலம்  வழங்கப்படும் கீழ்க்கண்ட நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை கலெக்டர் விரிவாக எடுத்துரைத்தார்.  டாம்கோ மூலம் கடன் உதவி திட்டம்பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான                கல்வி உதவித்தொகை திட்டம்.முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள். உலமாக்கள் மற்றம் பணியாளர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள். சிறுபான்மையினர் மாணவஃமாணவியர்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்பில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான பரிசுகள்தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறித்துவ பிரிவினரும் இஸ்ரேலில் உள்ள புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர அரசு ரூ.20000- நிதி உதவி.இவ்விழாவில் 46 சிறுபான்மையினர் பயனாளிகளுக்கு ரூ. 5,00,000- மதிப்பிலான கீழக்கண்ட நலத்திட்ட உதவிகள் கலெக்டர் அவர்களால் வழங்கப்பட்டது. சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர்             உதவித்தொகை மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டங்களின்  கீழ் 15 நபர்களுக்கு உததுவித்தொகை உத்திரவுகளும், சிறுபான்மையினர் வகுப்பினை சேர்ந்த 18 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளும்,  மாவட்ட புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் தையல் மிஷன், பெட்டிக்கடை, மாடு வளர்ப்பு மற்றும் ஆடு வளர்ப்பு ஆகிய தொழில்கள் தொடங்க 13 பயனாளிகளுக்கு  கடன் தொகைகளும்  வழங்கப்பட்டது.                மேலும் இவ்விழாவில் கலந்துக்கொண்ட சிறுபான்மையின மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட  கலெக்டரால் உத்திரவிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்