கே. ஈச்சம்பாடி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் வருகிற 28ம் தேதி நடக்கிறது

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      தர்மபுரி

தருமபுரி:தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கே.ஈச்சம்பாடி கிராமத்தில் வருகிற28ம் தேதிபுதன்கிழமையன்று காலை 9.00 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர்  தலைமையில் மக்கள்  தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்துறைக்க உள்ளார்கள். எனவே கம்பைநல்லூர் உள்வட்டம், கே. ஈச்சம்பாடி கிராமம் மற்றும் சுற்றுபுற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: