முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

35 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான நிதியுதவி

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      நீலகிரி
Image Unavailable

 

35 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான நிதியுதவியை நீலகிரி மாவட்ட கலெக்டர் பொ.சங்கர் வழங்கினார்.

 

நீலகிரி மாவட்ட தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு சமுதாய முதலீட்டு நிதிக்கான வங்கி வரைவோலை வழங்கும் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி 35 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான நிதியுதவியை வழங்கி பேசியதாவது-

 

 

மூன்றாவது தவணை

 

 

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்திலுள்ள 4 வட்டாரங்களிலுள்ள 35 கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 80 வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள முதல் மற்றும் இரண்டாம் தவணை நிதியில் ரூ.61.60 லட்சம் நிதியினை 63 கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி கணக்கிலிருந்து 27 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு துய. உதவிக்குழுக்களின்வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு வழங்கி உத்தரவிடப்பட்டது. மேற்படி 27 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிலிருந்து 154 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக ரூ.61.60 லட்சமும், மூன்றாவது தவணை நிதியாக 35 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.70 லட்சம் கூடுதல் சமுதாய முதலீட்டு நிதி விடுவிக்கப்பட்டு வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

பொருளாதார நடவடிக்கை

 

 

அதனைத்தொடர்ந்து தற்போது மாவட்டத்திலுள்ள 35 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு 4_வது தவணை சமுதாய முதலீட்டு நிதியாக தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 70 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிதியை கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு வழங்கி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்