ராணிப்பட்டை அடுத்த அவரக்கரை கிராமத்தில் உள்ள பர்வதவர்த்தினி சமேத காச்யப ஈஸ்வரர் கோயிலில் பைரவமூர்த்திக்கு கும்பாபிஷேக விழா!

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      வேலூர்

 

வாலாஜாப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த அவரக்கரை கிராமத்தில் அமைந்துள்ள பர்வதவர்த்தினி சமேத காச்யப ஈஸ்வரர் பைரவமூர்த்திக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுக்;காவை சேர்ந்த அவரக்கரை கிராமத்தில் ஏழுந்தருளியுள்ள பர்வதவர்த்தினி சமேத காச்யப ஈஸ்வரர் திருக்கோயிலில் நேற்று வைரவமூர்த்திக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவையோட்டி சுவாமிக்கு கணபதி ஹோமம், வேள்வி, வாஸ்து பூசை, எண்திசை காவலர் வழிபாடு, ஆன்நிறைவழிபாடு(கோபூசை) நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று காலை 9மணி முதல் 10.30மணியளவில் யாக சாலை பூஜை பைரவர்க்கு நடைபெற்றது. இதில் கலசநீர் எடுத்துக்கொண்டு சிவபெருமான் ஆலயத்தை மேளதாளத்துடன் வளம்வந்து 10.15மணியளவில் பைரவர்க்கு திருக்குட நன்னீராட்டுப் நீர்ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பைரவமூர்த்திக்கு பூவால் ஆலங்கரிக்கப்பட்டு தீபாரதணை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊர் நாட்டாண்மை கிருஷ்ணன், முன்னாள் கிராம ஊராட்சிமன்ற தலைவர்கள் தெங்கால் பத்மநாபன், நவ்லாக் சுந்தரேசன், மாவட்ட பிரிதிநிதி நாகேஷ், மற்றும் கிராம பொதுமக்கள், பக்தர்களும் திரளாக கலந்துகொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: