விஐடி சார்பில் சென்னையில் வரி ஏய்ப்பு, ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக பணத்தின் மதிப்பை குறைத்தல் பற்றிய கருத்தரங்கம் வருகிற 23ம் தேதி நடக்கிறது

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      வேலூர்

வேலூர்: வரி ஏய்ப்புப்பு ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக பணத்தின் மதிப்பை குறைத்தல் பற்றிய கருத்தரங்கம் சென்னையில் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. விஐடி பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் மத்திய அரசின் முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் என்.விட்டல், ஹரியானா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.ஜி.தேவசகாயம் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசுகின்றனர். நாட்டில் நிலவும் வரி ஏய்ப்புப்பு ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக பணத்தின் மதிப்பை குறைத்தல் பற்றிய கருத்தரங்கம் சென்னை சென்டிநேரியன் டிரஸ்ட் சார்பில் இம்மாதம் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை சென்னை அண்ணா சாலைப்பு ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள ராணி சீதை அரங்கில் நடைபெறுகிறது. சென்னை சென்டிநேரியன் டிரஸ்டின் தலைவரும் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் மத்திய அரசின் முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் என்.விட்டல் ஹரியானா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.ஜி.தேவசகாயம் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் இன்டஸ்டிரியல் எகானமிஸ்ட் பத்திரிகை ஆசிரியர் எஸ்.விசுவநாதன் ஆகியோர் பங்கேற்று பணத்தின் மதிப்பை குறைத்தல் பற்றிய தங்களின் கருத்தை எடுத்துரைக்க உள்ளனர். இந்நிகழ்வின் ஏற்பாடுகளை சென்னை சென்டிநேரியன் டிரஸ்டின் நிர்வாக அரங்காவலரும் தாகூர் எஜிகேசனல் சொசைட்டி தலைவருமான முனைவர் கே.சி. ராஜாபாதர் டிரஸ்ட் செயலாளர்; சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் டி.ராஜா கணேசன்; டிரஸ்ட் அறங்காவலர்கள் விவேக பாரதி கல்வி நிறுவனத்தின் தலைவர் முனைவர் அப்பாஸ் இப்ராஹிம் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் விருக்ஷா மாண்டிசோரி பள்ளி முதல்வர் ஜெயஸ்ரீ ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: