திருவண்ணாமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே உள்ள ஆண்டாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (49) விவசாயி. இவரது தங்கை பச்சையம்மாள் அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கிணறு தோண்டி வருகிறார் சம்பவத்தன்று சண்முகம் கிணறு தோண்டும் பணியை பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராமல் தவறிவிழுந்தார் இதில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து சண்முகம் மனைவி ஜெயந்தி மங்கலம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் முத்தையா வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: