சின்னசேலம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் : கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு பணி மேற்கொண்டார். கனியாமூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தினை பார்வையிட்டு, அப்பகுதியில் உள்ள கழிப்பறையை தூய்மையாகவும், தேவையான தண்ணீர் சேமித்து வைக்கவும், தண்ணீர் குழாய்களை சரியாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார். மற்றும் கனியாமூர் புதிய காலனியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தையும், ஆய்வு செய்து இப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். புதிய காலனி குடியிருப்புப் பகுதிகளில் தூய்மை பார இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தனிநபர் கழிப்பறையையும், கிழக்கு வீதியில் 14வது நிதிக்குழு மானியம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தினையும் ஆய்வு செய்தார். கடத்தூர் ஊராட்சியில் 2015-16ஆம் நிதியாண்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தையும் ஆய்வு செய்து இப்பணியினை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினாhர். ஏர்வாய்பட்டினம் ஊராட்சியில் 2015-16ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் நாற்றுப் பண்ணை அமைத்தல் மூலமாக 1 லட்சம் பல்வகை மரக்கன்றுகள் நடுவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.

 

இவ்வாய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுந்தரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாநிதி, நாகராஜன் மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்: