சிதம்பரம் தொகுதி தில்லைவிடங்கன் ரேஷன் கடையில் எம்.எல்.ஏ கே.ஏ.பாண்டியன் திடீர் ஆய்வு

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      விழுப்புரம்

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியம் தில்லைவிடங்கன் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் சிதம்பரம் எம்.எல்.ஏ கே.ஏ.பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது விற்பனையாளர் ராமசாமியிடம் பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி,பருப்பு வகைகள், மண்னெண்னை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விபரங்களை கேட்டறிந்ததோடு பொதுமக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அனைத்து வேளை நாட்களிலும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது பொருட்கள் வாங்க வந்திருந்த பொது மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின் போது உடன் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் அசோகன், சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், மு.ஒன்றிய செயலாளர் கனகராஜன், மு.மாவட்ட கவுன்சிலர் கர்ணா, தொழில் நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கார்த்திகேயன், சுவாமிநாதன், நிர்வாகிகள் வீரபாண்டியன், திருமுருகன், அருள்மணி, பரமாநந்தம், காளிமுத்து, ஆறுமுகம், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: