கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      புதுச்சேரி
ஆய்வு கூட்டம்

கடலூர்.

 

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் கலெக்டர் அவர்கள், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட நிதி வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் கடலூர் செம்மண்டலம் முதல் பட்டாம்பாக்கம் வரையிலான15.5 கிலோமீட்டர் கஸ்டம்ஸ் சாலை அமைக்கும் பணியின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணியின் தரத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமலும், குறித்த நேரத்தில் விரைந்து முடிக்கவும் அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார்.

 

மேலும், கலெக்டர் குமராட்சியில் வெள்ளியங்கால் ஓடையின் குறுக்கே ரூ.2.50 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் பரங்கிப்பேட்டை பாசிமுத்தான் ஓடையின் குறுக்கே ரூ.1.46 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரவிச்சந்திரன், கடலூர் செயற்பொறியாளர் ஆர்.மலர்விழி, விருத்தாச்சலம் செயற்பொறியாளர் கே.பிரபாகர், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: