முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டிற்கு செல்ல விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த நபர் கைது

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      சென்னை

சென்னை, கொடுங்கையூர், கே.கே.நகர், சிட்கோ மெயின் ரோடு எண்.5பி என்ற முகவரியில் வசிக்கும் ஜாவித் (32), த/பெ முகைதீன் அலி என்பவர், அவருக்கு தெரிந்த நபர் மூலம் மன்சூர் அலிகான் என்பவர் அறிமுகமானதாகவும், மன்சூர் அலிகான் தனக்கு வெளிநாடு செல்ல விசா பெற்றுத் தருவதாகக் கூறியதாகவும், அதன்பேரில், ஜாவித் ரூ.1,10,000/- ரொக்கமாகவும், ரூ.3,27,000/- காசோலையாகவும், மன்சூர் அலிகானிடம் கொடுத்தாகவும், ஆனால் கூறியபடி விசா பெற்றுத் தராமலும், கொடுத்த பணத்தை திருப்பித் தராமலும் மன்சூர் அலிகான் ஏமாற்றி வருவதாக, கடந்த 20.12.2016 ஜாவித் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் நேற்றுமுன் தீனம் மாலை ஜாம்பஜாரில் உள்ள தனியார் ஓட்டல் அறையில் தங்கியிருந்த குற்றவாளி மன்சூர்அலிகான் (24), த/பெ அப்துல் லப்பை, எண்.96/74, காந்தி ரோடு, தேவக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், மன்சூர் அலிகான், விசா பெற்றுத் தருவதாகக் கூறி ஜாவித்திடமிருந்து சுமார் ரூ.4 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து, தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்