அரியலூர் மாவட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்காணல் வருகிற 26ம் தேதி முதல் 30ம் தேதி நடக்கிறது

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      அரியலூர்

கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு அரியலூர் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புதவற்கு நேர்காணல் தேர்வு திருச்சி மண்டலத்தில் 26.12.2016 முதல் 30.12.2016 வரை தினமும் காலை 9.00 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும் மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, தமிழ்நாடு கோழி அபிவிருத்தி கழக வளாகம், புதுக்கோட்டை மெயின்ரோடு, கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி - 620 023 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது எனவும், அதனில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் நேர்முக அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள் நேர்முக அழைப்பாணைகளை றறற.வn.பழஎ.in என்ற வலைதளத்திலிருந்து 22.12.2016 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் நேர்முக அழைப்பாணைகளை 23.12.2016 மற்றும் 24.12.2016 ஆகிய நாட்களில் அந்தந்த மாவட்ட மண்டல இணை இயக்குநர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: