பெரம்பலூர் மாவட்டத்தில்ஜெருசேலம் புனித பயணம் மேற்கொள்வதற்கு காலக்கெடு நீட்டிப்பு : கலெக்டர் க.நந்தகுமார் தகவல்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      பெரம்பலூர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசேலம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20000 நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 16.12.2016க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழக அரசின் ரூ.20000 நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ஜெருசேலம் புனித பயணம் மேற்கொள்வதற்கு காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அதற்கான விண்ணப்பங்கள் 30.12.2016 மாலை 5.45 மணிக்குள் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, 5வது தளம், அண்ணாசாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும். இதர நிபந்தனைகளில் மாற்றம் ஏதும் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: