முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராம பெண்களின் வாழ்க்கை தரம் உயர விலையில்லா கால்நடைகளை வழங்கி, வாழ்வில் வளம் சேர்த்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா : கரூர் மாவட்ட மக்கள் கண்ணீருடன் நன்றி

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      கரூர்
Image Unavailable

ஆடு வளர்த்தா ஆளாகிடலாம் என்ற பழமொழிக்கேற்ப ஒரு நாட்டின் வளங்களில் அதிக முக்கியத்துவம் பெறும் கால்நடைச் செல்வங்கள் உற்பத்தியை அதிகரித்தால் வளம் பெற முடியும் என்பதை நன்குணர்ந்த முதலமைச்சர் கால்நடைகளை விலையில்லாமல் வழங்கி தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறார்கள். இதனால் பயனடைந்த பயனாளிகள் தெரிவித்ததாவது: கரூர் மாவட்டம் செவ்வந்திபாளையத்தில் பகுதியைச் சேர்ந்த பார்வதி தெரிவித்ததாவது, நான் செவ்வந்திபாளையத்தில் வசிக்கும் வறுமையில் வாழும் எழை குடும்பத்தைச் சார்ந்தவள். எனக்கு அரசு கொடுத்த நாலு விலையில்லா ஆடுகள் இரண்டு ஆடுகளில் 18 ஆடுகளைக்கொண்ட ஒரு ஆட்டுப்பட்டி வைத்துள்ளேன். எந்த வேலையும் இல்லாம வறுமையில் தவித்த எனக்கு புத்துணர்ச்சி கிடைச்ச மாதிரி இருக்கு. அதுல சில ஆடுகளை வித்து என் புள்ளைங்க படிப்புக்காக பயன்படுத்திருக்கேன். இதுனால என் குடும்பம் ரொம்ப நல்லாயிருக்கு. என்னோட மூத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி முடிச்சிட்டேன். தமிழக அரசுக்கும், முதலமைச்சர் அம்மா அவங்களுக்கும் என்னோட மனமார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கிறேன். வெண்ணைமலையைச் சேர்ந்த பயனாளி தெரிவித்ததாவது, என் பெயர் வைரமணி. என் கணவர் பெயர் வைரப்பெருமாள். நாங்க வெண்ணைமலையில் குடியிருக்கோம். எங்களுக்கு 2011-ல் அரசாங்கத்தின் மூலமாக 3 பொட்டையாடும், ஒரு கிடாவும்; கொடுத்தாங்க. ஆடுகள் வளர்ப்பது எப்படின்னு அலுவலர்கள் வந்து சொல்லிக்கொடுத்தாங்க. அப்பப்ப ஆடுகளோட வரச்சொல்லி சீக்கு இருந்தால் ஊசி போட்டு மருந்தெல்லாம் இலவசமா கொடுத்தாங்க. அதனால் ஆடுகளை நல்ல முறையில் வளக்க முடிந்தது. இப்பவரைக்கும் 32 குட்டிகள் வித்துருப்பேன். கிட்டத்தட்ட ஒரு லட்சத்து இருபதினாயரம் ரூபாய் கிடைத்தது. அதில 3 மாடுகள் வாங்கினோம், ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யறோம். நாங்கள் இந்த அளவிற்கு கிராமத்தில் வளர, சமுதாய அந்தஸ்து பெற உதவிய எங்களுக்கு ஆடு கொடுத்த முதலமைச்சர் அம்மாதான் காரணம். அம்மா அவங்களுக்கு நன்றி. கடவூரைச் சேர்ந்த பயனாளி தெரிவித்ததாவது, எங்கள் ஊர் கடவூர். நான் ஆனந்தி, என் கணவர் பெயர் வெள்ளியிங்கிரி. எங்களுக்கு தந்த நான்கு ஆடுகளையும் நன்றாக வளர்த்தோம். ஆடுகள் குட்டி போட, குட்டிபோட பத்திரமா வளர்த்து வந்தோம். ஒரு சமயத்தில் எங்களிடம் 60 ஆடுகளுக்கு மேல் இருந்தது. அதில் 35 குட்டிகளை விற்று, ஐம்பதாயிரம் ரூபாய் கடனை அடைத்து, மேற்கொண்டு பொண்ணை இஞ்சினியருக்கு படிக்க வைத்தோம். தற்பொழுது பொண்ணு வேலையில் இருக்கிறாள். பையனும் பள்ளிக்கூடம் நன்றாக படித்துக்கொண்டிருக்கிறான். இதற்கெல்லாம் காரணமான எங்களுக்கு ஆடுகொடுத்த முதலமைச்சருக்கு நன்றி சொல்கிறோம் என்று தெரிவித்தார்.

 

பண்டைய காலங்களில் படையெடுத்து வரும் மன்னன், அந்த நாட்டின் செல்வ வளங்களான ஆடு, மாடுகளை கவர்ந்து சென்று அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலை குலையச்செய்து நாசப்படுத்துவார்களாம். இந்த பழைய வரலாற்றை மாற்றி வெளி மாநிலங்களிலிருந்து கால்நடை கொள்முதல் செய்து விலையில்லாமல் வழங்கி நாட்டை வளப்படுத்தும் பதிய முயற்சியில் ஈடுபட்டு உலகத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்த மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் திட்ட செயல்பாடுகளை நினைவு கூறுகையில் நெஞ்சம் மட்டுமல்ல, உயிரே உருகுதம்மா.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்