முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் சமூதாய வளைகாப்பு நடத்தி கர்ப்பிணிகளின் தாய்க்கு தாயாக விளங்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா : பயனடைந்த பெண்கள் நெஞ்சம் உருக நன்றி

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      திருவாரூர்
Image Unavailable

தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் நலனை பேணி பாதுகாத்து வருகிறார்கள்.குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கும், அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் உறுதுணையாக திகழ்ந்து வருகிறார்கள். அந்தவகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பை அரசின் சார்பில் நடத்தப்பட வேண்டும் என கடந்த 2013 ஆம் ஆண்டு ஆணையிடப்பட்டு அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய அளவில் சமூதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகி;றது.இதன் மூலம் கர்ப்பிணி பெண்கள் மனதளவிலும்,உடல் அளவிலும் மகிழ்ச்சியும் , மன அமைதியும் அடைகிறார்கள். பிறக்கப் போகும் குழந்தை நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் பிறப்பதற்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்ச்சிகள் மற்றும் கேட்கும் திறன் வயிற்றில் இருக்கும் போதே உருவாகி விடுவதால் அறிவு வளர்ச்சி, சமூதாய வளர்ச்சி ஆகியவை ஏற்படுவதற்கு இந்த சமூதாய வளைகாப்பு விழா மிகச் சிறந்தவையாக உள்ளது. குறிப்பாக அனைத்து கர்ப்பணிகளையும் ஒன்றாக வைத்து சமூதாய வளைகாப்பு விழா நடைபெறுகின்ற போது ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி சமூதாய உறவும் மேம்படுகிறது. தமிழகத்தில் கர்ப்பணி பெண்கள் உடல் ஆரோக்கியதுடன் இருக்க குழந்தை பிறப்பதற்கு முன்பு 6 ஆயிரமும், குழந்தை பிறந்த பிறகு 6 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.12 ஆயிரம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பெறு நிதியுதிவி திட்டத்தின் கீழ் கர்ப்பணி பெண்களுக்கு வழங்கப்படுகிறது.தற்போது கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.12 ஆயிரம் என்பதை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கி ஆணைப் பிறப்பித்துள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 10 வட்டாரங்களில் 34 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு தொகுதிக்கு 40 நபர்கள் வீதம் 1360 நபர்களுக்கு ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் செலவிடப்பட்டு உரிய சீர்வரிசைகளுடன் சமூதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.இவ்விழாவில் கர்ப்பிணி பெண்கள் மனமகிழந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆணைக்குப்பத்தை சேர்ந்த சாந்தி திட்டம் குறித்து கூறுகையில் என்னை போன்று வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் கர்ப்பகாலத்தில் சமுதாய வளைகாப்பு செய்வது மனதிர்க்கு மகிழ்ச்சியாகவும், தாய் இல்லாத ஏக்கத்தை போக்குவதாகவும் இருக்கிறது. சாதி, மத , பேதமின்றி அனைவரும் ஒன்றாக இணைத்து சமூதாய வளைகாப்பு செய்வது சமூக நல்லிணகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.சமூதாய வளைகாப்பு நடத்திட ஆணையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார். திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியை சேர்ந்த சௌந்தர்யா திட்டம் குறித்து கூறுகையில் . வளைகாப்பு என்பது ஒரு பெண்ணுக்கு மனதளவில் மகிழ்ச்சியையும், உடலளவில் ஆரோக்கியத்தையும் தரக்கூடியதாகும். வாழ்வில் முக்கிய ஒர் நிகழ்வாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா சமூதாய வளைகாப்பு விழா நடத்த வேண்டும் என ஆணையிட்டார்கள். அதன்படி சாதி, மதி பேதமின்றி கர்ப்பணி பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சமூதாய வளைகாப்பு விழா நடத்தினார்கள்.இந்த வளைகாப்பு விழாவானாது ஒரு தாய் வீட்டில் நடக்கின்ற வளைகாப்பு போல் மிக சிறப்பாக நடத்தப்பட்டது.முறையாக அனைத்து சீர்வரிசைகளுடன் வளைகாப்பு அனிவித்தது .என் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் ராயுபுரத்தை சேர்ந்த ராதிகா திட்டம் குறித்து கூறுகையில் சமுதாய வளைகாப்பு விழா என்பது உளவியல் ரீதியாக ஒவ்வொரு கர்ப்பிணியும் தன்னுடைய கர்ப்ப காலத்தில் மனதளவில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தால் பிறக்கப் போகும் குழந்தை மிகுந்த ஆரோக்கியத்துடனும், முழு வளர்ச்சியுடன் குழந்தை பிறக்கும் என்பதை உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா தாய் இருந்து சமூதாய வளைகாப்பு நடத்திட ஆணைப்பிறப்பித்தார்கள். இதனால் குறிப்பிட்ட நாளில் கர்ப்பிணி பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து எந்தவித சமூக வேறுபாடின்றி பூ,மஞ்சள், பழங்கள், புடவை, வளையல்களுடன் வளைகாப்பு நடத்தப்படுவது. என் போன்ற கர்ப்பிணி பெண்களுக்கு மற்ற கர்ப்பணி பெண்களுடன் சேர்த்து வளைகாப்பு நடத்த ஆணைப்பிறப்பிதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் என உளமார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்