திருவண்ணாமலை அருகே மனைவி மாயம் - கணவர் புகார்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை அருகே உள்ள நாச்சானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (26) இவரது மனைவி ஆனந்தி (22) கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற முருகன் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மனைவியை காணவில்லையாம். அக்கம் பக்கம் மற்றும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகன் வாணாபுரம் காவல்நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் சுபா வழக்கு பதிவு செய்து ஆனந்தியை தேடி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: