தி.மலை மலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலையில் கடந்த 12ந் தேதி கார்த்திகை மகா தீப திருவிழா நடைபெற்றது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இதேபோல் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபத்தை சென்று தரிசித்தனர். இதுமட்டுமின்றி தினந்தோறும்100க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கு சென்று மகாதீபத்தை தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் மலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமாக இருப்பதை அநத வழியாக சென்றவர்கள் பார்த்து திருவண்ணாமலை நகர காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றினர். அந்த நபர் இறந்து சுமார் 3 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது கைகால் அழுகிய நிலையில் உள்ளன. இவர் மலைக்கு தீபம் பார்க்க வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு பலியானாரா?அல்லது மர்ம நபர்கள் யாராவது கொலை செய்தனரா? என்ற பல்வேறு கோணங்ககளில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மகாதீபம் நேற்றிரவு நிறைவுபெற்றது. இந்நிலையில் மலையில் ஒருவர் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே மலைக்கு பரிகார பூஜை செய்யப்பட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை ஆகும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: