படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது :கலெக்டர் சி.கதிரவன் தகவல்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      கிருஷ்ணகிரி

படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் துவங்கும் பொருட்டு உற்பத்தி சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.3 இலட்சம் வரையிலும் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரையிலும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம் "படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்". அரசாணை எண் 35 குறு சிறு மற்றும் நடுதரத் தொழில்கள் துறை நாள் 11.11.2016 ன் படி இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கான திட்ட மதிப்பீடு ரூ. 5 இலட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்க ஆணையிடபட்டுள்ளது. அதிகபட்ச மானிய உச்சவரம்பு ரூ. 1.25 லட்சம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். வயது 18 வயதிற்கு மேல் அதிகபட்சமாக 35 வரை பொது பயனாளிகளுக்கு இருத்தல் வேண்டும். சிறப்பு பயனாளிகளான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு அதிகபட்ட வயது வரம்பு 45 ஆகும். பொதுபிரிவு பயனாளிகள் தமது பங்களிப்பாக திட்ட மதிப்பீட்டில் 10மூ செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவினர்கள் 5மூ செலுத்தினால் போதுமானதாகும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000க்கு மிகாமல் இருத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு தமிழக அரசு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25சதவீதம் அதிகபட்சமாக ரூ.1,25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பங்கள் கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற் பேட்டையில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகம் அல்லது ஓசூர் புதிய பஸ் நிலையம் எதிரே ஓட்டல் ஆனந்தபவன் அருகில் அமைந்துள்ள, மின் மற்றும் மின்னணு தொழிற்பேட்டை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்றிதழ், விலை புள்ளி  மற்றும் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களை பொது மேலாளர் தலைமையில் தேர்வுகுழுவால் தேர்வு செய்து உங்கள் அருகில் உள்ள வங்கி கிளைக்கு அனுப்பி வைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகளுடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: