முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்களில் டிக்கெட் பயணம் செய்த 96 பேருக்கு அபராதம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      சேலம்

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில், அதிகளவு பயணிகள் டிக்கெட் இன்றி பயணிப்பதாக கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவுக்கு புகார்கள் வந்தது. இதன்பேரில் கோட்ட வணிக உதவி மேலாளர் ஷாஜகான் தலைமையில் 7 பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் ஈரோடு, கரூர் ரயில் நிலையங்களுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டனர். மும்பை,நாகர்கோயில் எக்ஸ்பிரஸ், மங்களூர், சென்னை எக்ஸ்பிரஸ், சேலம்&கரூர் பாசஞ்சர் உள்ளிட்ட ரயில்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், டிக்கெட் இன்றி பயணித்த 94 பேரும், லக்கேஜ் எடுத்துச்செல்ல டிக்கெட் எடுக்காத 2 பேரும் என மொத்தம் 96 பேர் சிக்கினர். அவர்கள் அனைவர் மீதும், ரயில்வே சட்டப்படி வழக்குப்பதியப்பட்டு, ரூ.35 ஆயிரத்து 700 அபராதமாக வசூலிக்கப்பட்டது.ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சரக்குகளை எடுத்துச்செல்வதும் தண்டனைக்குரியது. அவர்களிடம் இருந்து இரருமடங்கு கட்டணம் வசூலிப்படுவதுடன் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை பயணிகள் தவிர்க்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்