முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா மருத்துமனையில் அனுமதி

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      சினிமா
Image Unavailable

மும்பை  - பழம் பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பழம் பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா மும்பை ஜூகுவில் வசித்து வருகிறார். 3 நாட்களுக்கு முன் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனையில், வயிற்று கோளாறு காரணமாக வாந்தி மற்றும் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் வேகமாக குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்