முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      சேலம்

தருமபுரி,

தருமபுரி கலெக்டர் கூடுதல் கட்டிடத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்  கே. விவேகானந்தன்,  தலைமையில் நேற்று (23-12-2016) நடைபெற்றது. 

வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல், வேளாண் அறிவியல் மையம், கால்நடை பராமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, வேளாண்மை விற்பனைத்துறை மூலம் விவசாயிகள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த வண்ணம் கருத்துக்கண்காட்சியை பார்வையிட்டு பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது :-

தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் வட்டார அளவில் வுயளம குழசஉந ஊழஅஅவைவநந-இல் வழங்கப்படும் மனுக்கள் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பேரேட்டில் பதிவு செய்து அரசு வழங்கும் நலத் திட்டங்கள் ஒரு சில விவசாயிக்கு மட்டுமல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும். வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சூரிய ஒளியின் மூலம் நீர் இறக்கும் இயந்திரம் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.  தருமபுரி மற்றும் அரூர் கோட்டாட்சியர் அளவில் நடைபெறும் ஊழnஎநசபநnஉல கூட்டம் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து துறையினரும் கலந்து கொள்கிறார்கள். இதே போல் கூட்டுறவுத்துறையும் கலந்து கொண்டு விவசாயிகளின் பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், மேலும் விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க் கடன்  விண்ணப்பம் தள்ளுபடி செய்வதாக இருந்தால் வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்லைத்துறையினருடன் நடைபெறும் குழுக் கூட்டத்தில் பரிசீலனை செய்து தீர்மானிக்க வேண்டும். கூட்டத்தில் அனைத்து கூட்டுறவு செயலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளைத் தேடி அவர்களின் பிரச்சினைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசு நலத் திட்டங்கள் குறித்து தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சர்க்கரை ஆலைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வெளியிடப்பட வேண்டும் எனவும், விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவுத் துறையின் மூலம் கூட்டுறவுக் கடன் குறித்த ஆட்சேபனை இல்லா சான்று தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளில் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, வனத்துறை, ஆவின் நிறுவனம், கூட்டுறவு சங்கங்கள், தொழில்மையம், புதுவாழ்வு திட்டம், மாவட்ட தொழில்மையம் மற்றும் சிப்காட் ஆகிய அனைத்து துறைகளின் பல்வேறு விவசாயிகளின் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் கே.விவேகானந்தன், அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்   அ. சங்கர், வேளாண்மை இணை இயக்குநர்  சி. ராஜேந்திரன், சிப்காட் பொது மேலாளர்  பஷீர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)  ரா.ரா. சுசீலா, தருமபுரி மற்றும் அரூர் வருவாய் கோட்ட அலுவலர்கள் ராமமூர்த்தி,  கவிதா, துணை பதிவாளர், ஆவின் நிறுவனம் திரு தனபால், .உதவி பொது மேலாளர், நபார்டு  திரு பார்த்தசாரதி, மாநில விவசாயிகள் சங்கத் தலைவர்  பி.கே. சின்னசாமி, வேளாண்மைத்துறை அலுவலர்களும், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்