முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் போலி டாக்டர் கைது

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      சேலம்

சேலம்,

சேலம் கோரிமேட்டில் போலி டாக்டர்கள் அதிகளவில் இருப்பதாகவும், அவர்கள் கருகலைப்பு, கருணைக்கொலை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் முதன்மை மருத்துவ வட்டார அலுவலர் ஜெயந்தி மற்றும் கன்னங்குறிச்சி போலீசார் கோரிமேட்டில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த தனசேகரன் (56), என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு கடந்த 35 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. சேலம் களரம்பட்டி மெயின்ரோடு ஜெய் நகரை சேர்ந்த அவர் ஆரம்பத்தில் டாக்ட் ஒருவரிடம் காம்பவுண்டராக இருந்து வந்துள்ளார். பின்னர் அவர் தனியாக டாக்டர் என கூறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். பொதுமக்கள் ஆலோசனைக்காக வந்தால் ரூ.40 கட்டணம் வசூலிப்பார். யாரும் சந்தேகம் ஏற்படாத வகையில் அடிக்கடி இடத்தை மாற்றி மாற்றி வந்துள்ளர். இவரது அறையில் இருந்து 10 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மருந்து, மாத்திரைகள், மற்றும் ஊசிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலி டாக்டரான தனசேகரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுதி சிறையில் அடைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்