முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிபோதையில் வீட்டு காவலாளியை தாக்கிய நபர் கைது

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      சென்னை

சென்னை, சௌகார்பேட்டை, ஆச்சாரப்பன் தெரு, எண்.40 என்ற முகவரியில் உள்ள வீட்டில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடய்யா (54),  என்பவர் காவலாளியாக (வாட்ச்மேன்) வேலை செய்து வருகிறார். நேற்று முன் தீனம்  மாலை சுமார் 05.45 மணிக்கு இவர் வேலை செய்யும் வீட்டின் வெளியில் ஒரு நபர் குடிபோதையில் படுத்திருந்ததை கண்டு வெங்கடய்யா அவரை எழுப்பியுள்ளார். குடிபோதையில் இருந்த அந்த நபர் வெங்கடய்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகராறு செய்துள்ளார்.  இந்நிலையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் குடிபோதையில் இருந்த அந்த நபர் அருகிலிருந்த கட்டையால் வெங்கடய்யாவை தாக்கியதில், வெங்கடய்யாவிற்கு தலையில் பலத்தக் காயமடைந்து ரத்தம் கொட்டியது. ரத்தக் காயமடைந்த வெங்கடய்யாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொத்தவால்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், வெங்கடய்யாவை கட்டையால் தாக்கிய நபரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் ரமேஷ் (38), த/பெ குப்பன், கே.பி. பார்க், புளியந்தோப்பு என்பதும், அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்ததும், நேற்று முன் தீனம் ரமேஷ் குடிபோதையில் தகராறு செய்து, வெங்கடய்யாவை தாக்கி ரத்தக் காயம் ஏற்படுத்தியதும் தெரிய வந்தது.  கைது செய்யப்பட்ட ரமேஷ், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு   சிறையில் அடைக்கப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago