முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னைக்கு ஏற்ற புதிய மரக் கன்றுகள் நடப்படும்: மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      சென்னை

சென்னை மாநகரின் தட்பவெப்பத்துக்கேற்ப புதிய மரக் கன்றுகள் நடப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
வர்தா புயலின் பாதிப்பு குறித்து அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு பின்பு அவர் மேலும் கூறியதாவது:
வர்தா புயலில் விழுந்து சரிந்த மரங்களை அகற்றி பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை வளாகங்களுக்கு கொண்டு செல்வதற்காக ஏற்படும் காலதாமதத்தை தவிர்த்திடவும், விரைவாக மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் தாற்காலிக 78 குப்பை கொட்டும் வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டு மரக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், தனியார்கள் தங்களது வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலக வளாகங்களில் உள்ள மரக்கழிவுகளை துôய்மைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் கொட்டுகின்றனர்.இதனால் பணியில் சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும், பணியாளர்கள் மூலம் சாலைகளில் விழுந்த மரங்கள் மற்றும் மரக்கழிவுகளை அகற்றும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன.இந்திய அரசு நிறுவனமான மெட்டல் ஸ்க்ராப் டிரேடிங் கார்ப்பரேஷன் மற்றும் வனத்துறை மூலம் அகற்றப்பட்ட மரக்கழிவுகள் மதிப்பிடப்பட்டு, சனிக்கிழமை (டிச.24) அவை ஏலம் விடப்பட்டு, திங்கள்கிழமை முதல் தாற்காலிக குப்பை கொட்டும் வளாகங்களிலிருந்து மரங்கள் அகற்றப்படும். எஞ்சிய மரக்கழிவுகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தாற்காலிக குப்பைக் கொட்டும் வளாகங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் திறந்த வெளி நிலங்கள், சாலையோரங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பிற இடங்கள் மரக்கழிவுகள் அகற்றப்பட்டபின் அவை சீரமைக்கப்பட்டு, பழைய நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மரங்கள் முறிந்து விழுந்த இடங்களில், பெருநகர சென்னையின் தட்பவெப்ப நிலைக்கேற்ப புதியதாக மரக்கன்றுகள் நடுவதற்கு நிபுணர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தி, அதனடிப்படையில் அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்படும் என்றார் தா.கார்த்திகேயன்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்