முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

165 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த மாம்பலம் இன்ஸ்பெக்டர்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      சென்னை

சென்னையில் 6 ஆண்டுகளில் 165 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த மாம்பலம் இன்ஸ்பெக்டருக்கு வாட்ஸ்அப்பில் வாழ்த்துக்கள் குவிகின்றன. சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து வருகிறார்கள். இப்படி கைது செய்யப்படும் நபர்கள் ஓராண்டு தடுப்பு காவலில் வைக்கப்படுவார்கள். சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக ஜார்ஜ் பொறுப்பேற்ற பின்னர், குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.இதற்கு முன்னர் ஜார்ஜ் கமி‌ஷனராக இருந்த போது போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தீவிரமாக செயல்பட்டு தங்கள் பகுதியில் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் அதிகமாக அடைத்தனர். இப்போதும் அதுபோன்ற நடவடிக்கை தொடர்கிறது.கடந்த 2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் ரவுடிகள் பலரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். இந்த நடவடிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து வருகிறது. மாம்பலம் போலீஸ் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து தற்போதுவரை 95 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் 165 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி முதலிடத்தில் உள்ளார்.இதுதொடர்பாக அவருக்கு வாட்ஸ் அப்பில் வாழ்த்துக்களும் குவிகின்றன. இதுபற்றி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, இது என்னுடைய தனிப்பட்ட முயற்சியால் நடந்தது இல்லை. உயர் அதிகாரிகளின் ஊக்கமும் எனக்கு கீழ் பணியாற்றிய போலீசாரின் கூட்டு முயற்சியுமே இதற்கு காரணமாகும் என்றார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்