முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் தலைமையாசிரியர்கள் மற்றும் விடுதிகளின் காப்பாளர் ஆய்வுக் கூட்டம் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் விடுதிகளின் காப்பாளர், காப்பாளினி ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நேற்று (23.12.2016) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, தலைமையாசிரியர்கள் மற்றும் காப்பாளர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும், கல்வி தரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களை தரம் பிரித்து அவர்களுக்கு குறுகிய வினா விடை பயிற்சி மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்அல்லாத பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கவும், தலைமையாசிரியரை பாடங்களை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆர்வமாக படிக்கும் மாணவர்களை வாழ்வில் நல்ல நிலைக்கு வர தலைமையாசிரியர்கள் வழிநடத்திட வேண்டும். விடுதியில் தங்கி பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் கல்வி தரத்திலும் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக விடுதி காப்பாளர், காப்பாளினி தனிக் கவனம் செலுத்த வேண்டும். பொது தேர்வு எழுதம் மாணவ மாணவியர்களுக்கு மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தி அவர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி தேர்வு எழுத ஊக்கம் அளித்திட வேண்டும். பொதுத் தேர்வு முடியும் வரை விடுதியில் தங்கி பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பள்ளி விடுமுறை நாட்களிலும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்திட வேண்டும் எனவும், மாணவ மாணவியர்களின் கல்வித் தரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்களிடம் தொடர்பு கொண்டு சிறப்பு கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டுமெனவும், பொது தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறவும் மாநில, மாவட்ட அளவிலான இடங்களில் பெறும் அளவில் ஊக்கப்படுத்திட காப்பாளர்களை அறிவுறுத்தினார். விடுதி தங்கி பயிலும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு குடிமை பணி தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் எழுத ஏதுவாக தகுந்த சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்திட ஆதி திராவிடர் நல அலுவலர் ஆவணம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி, தலைமை யாசிரியர்கள், விடுதி காப்பாளர் மற்றும் காப்பாளினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்