கோத்தகிரியில் கிராம தலைவர்களுக்கு தொழிற்பயிற்சி

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      நீலகிரி

கோத்தகிரியில் கிராம தலைவர்களுக்கு தொழிற்பயிற்சி நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்ட தொழில் மையம் மற்றும் நீலகிரி ஆதிவாசிகள் சங்கம் சார்பில் ஆதிவாசி பெண்கள் மற்றும் கிராம தலைவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டது. கோத்தகிரியில் உள்ள நீலகிரி ஆதிவாசிகள் நலசங்க அரங்கில் நடைபெற்ற பயிற்சிக்கு சங்க செயலாளர் ஆல்வாஸ் தலைமை தாங்கினார். திட்ட மேலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

                      தொழில் தொடங்க மானியம்

இம்முகாமில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட தொழில்மைய மேலாளர் அசோகன், கோவை தொழில்மைய உதவி மேலாளர் சண்முக சிவா, உதவி இயக்குநர்கள் பிருந்தா தேவி, ராஜேஸ்வரி, பிரியா, எட்வர்ட் செல்வம் மற்றும் உதவி பொறியாளர் ஆஷாதேவி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். அப்போது மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாடு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு தொழில்தொடங்க ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் கோத்தகிரி சுற்று வட்டார ஆதிவாசி கிராமங்களைச் சேர்ந்த 100_க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராமத்தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட இயக்குநர் புஷ்ப குமார் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: