கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்கள்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      கோவை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலுள்ள 100 வார்டுகளில் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வகையில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை கொண்டு ரேஸ்கோர்ஸ் சிறுவர் பூங்கா அருகில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்   கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நேற்று (23.12.2016) வழங்கினார்.

பிரச்சார வாகனம்

          கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளிலும் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 என்பது “புகைப்படம் எடுப்போம்! மாற்றத்தை உறுவாக்குவோம்!!” மற்றும் ஸ்வச்சதா செயலி யுPP என்பது “நமது கையில் விலையுயர்ந்த ஆயுதம் உள்ளது, புகைப்படம் எடுங்கள், ஸ்வச்சதா செயலி யுPP பதிவிறக்கம் செய்து உங்கள் பகுதியை செலவின்றி தூய்மைப் படுத்துங்கள்” என்று வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் ஏந்திய பிரச்சார வாகனங்கள் மூலமும் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

      மேலும், இதன் தொடாச்சியாக நேற்று (23.12.2016) ரேஸ்கோர்ஸ் சிறுவர் பூங்கா அருகில் 250க்கும் மேற்பட்ட கற்பகம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்  ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி பற்றிய துண்டு பிரசுரத்தை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

     இதனைத் தொடர்ந்து மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கும் இம்மாணவர்கள் வீடு வீடாக சென்று, பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு அளிப்பதற்கு பொது மக்கள் அதிக அளவில் கூடும் முக்கிய இடங்களான காந்திபுரம், ஆர்.எஸ்புரம் ஆகிய இடங்களில் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கோவை மாநகரை மாசற்ற மாநகராகவும், சுற்றுப்புற தூய்மையில் சிறந்த மாநகராமாக உறுவாக்குவோம்.

 

இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் ப.காந்திமதி , மத்திய மண்டல உதவி ஆணையர்(பொ) மோகனசுந்தரி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: