ஈரோடு மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு இ-சேவை

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      கோவை

ஈரோடு மாவட்ட கருவூலம்  சார்நிலை கருவூலங்களில் மாத ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு இ-சேவை மையங்களில் தங்களது ஆதார் எண் மற்றும் ஓய்வூதிய கொடுவை எண் மூலம் வருடாந்திர நேர்காணலுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் பதிவு செய்யும் பணி 24.11.2016 முதல் இ-சேவை மையங்களில் நடைபெற்று வருவதால் தங்களுடைய  ஆதார் எண், வங்கி கணக்கு எண், நிரந்தர கணக்கு எண் மற்றும் ஓய்வூதிய கொடுவை எண்ணுடன் இ-சேவை மையங்களில் நேரிடையாகச் சென்று மின்னணு வாழ்வு சான்றிதழை ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) சேவை கட்டணத்துடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

     மேலும் ஆதார் எண்ணை கருவூலங்களில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக மாவட்டசார்நிலை கருவூலங்களில் அதனை பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: