ஊரக பகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் : தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு பணி ஆணைகளை கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்

சனிக்கிழமை, 24 டிசம்பர் 2016      மதுரை
Veerarahavarao 2016 12 24

மதுரை : மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு திட்டம் இணைந்து நடத்திய ஊரக பகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தாய் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் நகரப்பகுதி இளைஞர்களுக்கு நிகராக ஊரக பகுதி இளைஞர்களும் அதிக அளவில் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் தமிழ்நாடு அரசு இலவசமாக பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு திட்டம் மூலம் 2016-17ஆம் ஆண்டில் ஏழு வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது. அதில் முதலாவதாக மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 2,192 இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் தகுதியான 760 நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று அலங்காநல்லூர் மற்றும் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஊரக பகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடப்பு 2016-17ஆம் ஆண்டிற்கான இரண்டாவது வேலைவாய்ப்பு முகாம் வாடிப்பட்டியில் அமைந்துள்ள தாய் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் 26க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இவ்வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விபரங்களை அலங்காநல்லூர் மற்றும் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான சுயஉதவிக் குழுக்களின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வழியாக, துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஆட்டோ பிரச்சாரம் மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்டது. இம்முகாமில் சுமார் 1800 இளைஞர்கள் கலந்துகொண்டு, 550 இளைஞர்கள் நேரடி வேலைவாய்ப்பினை பெற்று பயனடைந்தனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு மாவட்ட கலெக்டர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் அருண்மணி, புதுவாழ்வு திட்ட மேலாளர் சுபாஷ்பாபுநாத் மங்களம், வாடிப்பட்டி வட்டாட்சியர் வீரபத்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணையா, மீனாட்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: