முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவீன உபகரணங்களை பாகிஸ்தானுக்கு விற்கும் அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : இரவு நேரத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறியும் நவீன உபகரணத்தை பாகிஸ்தானுக்கு விற்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

சுமார் ரூ.1,930 கோடி மதிப்பீட்டில் இது தொடர்பான ஒப்பந்தம் இரு நாட்டுக்கும் இடையே கையெழுத்தாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. வெவ்வேறு வகையான நிலப்பரப்புகளில் இரவு நேரத்திலும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறியும் வகை யில் இந்த நவீன உபகரணம் உருவாக்கப்படுகிறது. இதனை ஏஎச்-1இசட் கோப்ரா ரக ஹெலி காப்டர்களில் பொருத்தி தீவிர வாதிகளின் நடமாட்டத்தை உளவு பார்க்க முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மொத்தத் தொகையில் பாகிஸ்தான் 12சதவீதம்  பணத்தை செலுத்தும். அமெரிக் காவின் ஆர்லாண் டோவைச் சேர்ந்த ஏவுகணை தயாரிப்பு நிறுவனம் 2022-க்குள் இந்த உபகரணத்தை தயாரித்து வழங்கவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்