முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியப்பகுதியில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் : கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      திருச்சி

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியப்பகுதியில் ரூபாய் 1 கோடியே19 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உத்தரவு

 

 

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இ.வெள்ளனூர், ஆலம்பாக்கம், பு.சங்கேந்தி, குமுளுர், வந்தலைக்கூடலூர், பெருவளப்பூர், பி.கே.அகரம், ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 

பு.சங்கேந்தி நடைபெற்றுவரும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டுதல், தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுமானப்பணி, இ.வெள்ளனூர், திடக்கழிவு மேலான்மை திட்டம், மண்புழு உரம் தயாரிக்கும் பணி, ஆலம்பாக்கம் மரக்கன்று நடும்பணி, இந்திரா நினைவு குடியிருப்பு சிறப்பு திட்டத்தின் கீழ் குடியிருப்பு அமைத்தல், தனிநபர் இல்ல கழிவறை கட்டுதல், வந்தலை கூடலூர் முதல் விடுதலைபுரம் வரை சாலை பலப்படுத்தும் பணி, கல்லமுத்து ஏரி அருகில் பெருவாரியான மரக்கன்று நடும்பணி, என மொத்தம் ரூபாய் 1 கோடியே 19 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) கிரந்திகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, செயற்பொறியாளர் ஜி.அனுராதா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலுவலர்கள் உடனிருந்தனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago