முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருத்துறைப்பூண்டியில் வர்த்தகர் சங்க 53-வது ஆண்டு விழா,

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      திருச்சி
Image Unavailable

 

திருத்துறைப்பூண்டியில் வர்த்தகர் சங்க 53-வது ஆண்டு விழா, புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

 

வர்த்தகர் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார், செயலாளர் கணபதி, பொருளாளர் ஜான் போஸ்கோ ஆகியோர் செயலறிக்கை, வரவு செலவு கணக்கு படித்தனர். 10, 12ம் வகுப்பில் அரசு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்தல் சட்ட ஆலோசகர் வக்கீல் வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது . புதிய தலைவராக செந்தில்குமார், செயலாளராக கணபதி, பொருளாளராக ஜான்போஸ்கோ, துணைத்தலைவராக சுராஜீ, துணைச் செயலாளராக லெட்சுமணன் மற்றும் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் மண்டல தலைவர் செந்தில்நாதன், மண்டல செயலாளர் ஆதப்பன், முன்னாள் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் துணைத் தலைவர் அப்துல்ரஹ்மான், முன்னாள் செயலாளர்கள் நாடிமுத்து, நாராயணமூர்த்தி, சிங்காரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் மற்றும் மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு இரங்கல் அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

மத்திய அரசால் கொண்டு வரப்பட இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் ஜி.எஸ்.டி குறித்து விளக்க கலந்தாய்வு கூட்டங்களை அரசே ஏற்று, அனைத்து ஊர்களிலிலும் நடத்த வேண்டும், வணிகர்களை பாதிக்காத ஒரு முனைவரியாக சட்டம் இயற்ற பாரத பிரதமரை கேட்டுக் கொள்வது, மத்திய அரசு கொண்டு வந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர், ஆனால் வங்கிகளில் புதிய 500, 2000 நோட்டுகள் இருப்பு இல்லை, ஏடிஎம்கள் முழுவதுமாக இயங்கவில்லை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இந்த இடர்பாடுகளை களைய வேண்டும், மழை, தண்ணீர் இன்றி விவசாயம் பொய்த்ததால் திருவாரூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30,000 வழங்க வேண்டும், தமிழக அரசு மின் மயானம் அமைக்க 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது விரைவில் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை திட்ட பணிகளை அரசு உடன் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவாரூர் - காரைக்குடி, திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகல ரயில்பாதை பணிகளை உடன் நிறைவேற்ற வேண்டும், நகரில் உள்ள 32 குளங்களை தூர் வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகரில் சுற்றித் திரியும் ஆடு மாடுகளை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் சுராஜி வரவேற்றார், துணைச் செயலாளர் லெட்சுமணன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்